வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அனுப்பி வைக்கலாம்


வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அனுப்பி வைக்கலாம்
x

வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களை அனுப்பி வைக்கலாம்

திருப்பூர்

திருப்பூர்

மக்களிடம் வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்கள் இருந்தால், அவற்றை கோவை மாவட்ட ஆவண காப்பகத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

ஆவண காப்பகம்

கோவை மாவட்டம் பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரிக்கு எதிரில் அரசு ஆவணங்களை பாதுகாக்கும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவண காப்பகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை நிறுவனங்களின் நிர்வாகம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் முழுமையான வரலாற்றை அறிவதற்கு அரசின் ஆவணங்கள் மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்கள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் ஆகியவற்றின் வசமுள்ள ஆவணங்களும் ஆராயப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தனிநபர், மத அமைப்புகள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், விடுதலை போராட்ட வீரர்கள், ஜமீன்தார்கள் மற்றும் சமஸ்தானங்களிடம் இருந்து தனியார் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

சுதந்திர போராட்ட கால கடிதங்கள்

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீரர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து காந்திஜி, நேருஜி போன்ற முக்கிய தலைவர்களுக்கு கடிதங்கள் மூலமாக தெரிவித்திருந்தால் அந்த தலைவர்களிடம் இருந்து வீரர்களுக்கு பதில் கிடைத்திருக்கும். அந்த கடிதங்கள் பாதுகாக்கப்பட்டால் இந்திய சுதந்திர போர் பற்றி அறிய பயன்படும்.

ஆங்கிலேய ஆட்சியின்போது ஜமீன்தார்கள் மற்றும் ஆங்கிலேயருக்கு இடையே கடிதப்போக்குவரத்து நடைபெற்றிருக்கும். அப்படிப்பட்ட ஜமீன்தார்களின் சந்ததிகள் தம் மூதாதையர்கள் விட்டுச்சென்ற வாழ்க்கை குறிப்புகள், காலக்குறிப்புகள் மற்றும் கடித போக்குவரத்துகள் நாட்டின் ஒரு பகுதியின் வரலாற்றை வெளிக்கொண்டு வர உதவியாக இருக்கும்.

ஆவணங்களை அனுப்பலாம்

இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம்கள் தங்கள் கோவில் பற்றிய புராணங்கள், வரலாற்று குறிப்புகள் புத்தக வடிவிலோ, செப்பு பட்டயங்களாகவோ, கிடைத்தால் அவை சமய வழிபாடு பற்றி அறிய உதவியாக இருக்கும். தங்களால் அனுப்பப்படும் ஆவணங்கள் விஞ்ஞான ரீதியாக செப்பனிட்டும், ஸ்கேன் செய்து கணினியில் பதியப்பட்டும், மைக்ரோ பிலிம் எடுத்தும் கோவை மாவட்ட ஆவண காப்பகத்தில் பாதுகாப்புடன் அதுபற்றிய விவரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில் தேசிய தனியார் ஆவணங்கள் பதிவேட்டில் பதித்து வைக்கப்படும்.

எனவே பழமைய வாய்ந்த பயனுள்ள ஆவணங்களை உதவி ஆணையாளர், மாவட்ட ஆவண காப்பகம், சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி எதிரில், சிறுவாணி மெயின் ரோடு, பேரூர், கோவை-641 010 என்ற முகவரிக்கும், 0422 2609474 என்ற எண்ணிலும், drccbr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பி வைக்கலாம்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

----


Next Story