செங்குந்தர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தேர்வு


செங்குந்தர் உறவின்முறை  சங்க நிர்வாகிகள் தேர்வு
x

எட்டயபுரத்தில் செங்குந்தர் உறவின்முறை சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் ஏழுதெரு செங்குந்தர் உறவின்முறை சங்க பொது குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பெரியதெரு மகமை தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மேலதெரு மகமை தலைவர் குருசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 7 தெரு செங்குந்தர் உறவின்முறை சங்க தலைவராக அய்யனார், செயலாளராக சக்திவேல், துணைச் செயலாளராக மாரிக்கண்ணன், பொருளாளராக குருசாமி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக முத்துச்சாமி, ஆவுடையப்பன், ராமசுப்பு, அய்யனார், குருசாமி, கணபதி உள்பட நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story