மூத்தோர் கால்பந்து போட்டி
மூத்தோர் கால்பந்து போட்டி
கோத்தகிரி
கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாநில அளவில் ராவ்பகதூர் ஆரிகவுடர் நினைவு கோப்பைக்கான மூத்தோர் கால்பந்து போட்டி நேற்று காலை தொடங்கியது. இதில் கேரளா, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், வியாசர்பாடி மற்றும் நீலகிரி ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடின. கால் இறுதி போட்டியில் கேரள அணி சென்னை அணியை 5-0 என்ற கோல் கணக்கிலும், திண்டுக்கல் அணி கோவை அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், நீலகிரி அணி வியாசர்பாடி அணியை 4-0 என்ற கோல் கணக்கிலும், திருப்பூர் அணி புதுக்கோட்டை அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வென்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற உள்ள முதல் அரை இறுதி போட்டியில் கேரளா மற்றும் திண்டுக்கல் அணிகளும், நீலகிரி மற்றும் திருப்பூர் அணிகளும் விளையாடுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு விழா மாலையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை தேசிய கால்பந்து நடுவர் பாலகிருஷ்ணன் தலைமையில் தேசிய மூத்தோர் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பெண்டா நாகராஜ், நஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.