சென்னிவீரபத்திரர், சன்னாசியார் கோவில் கும்பாபிஷேகம்


சென்னிவீரபத்திரர், சன்னாசியார் கோவில் கும்பாபிஷேகம்
x

சென்னிவீரபத்திரர், சன்னாசியார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

கல்லக்குடி:

புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் கிராமத்தில் உள்ள சென்னிவீரபத்திரர், சன்னாசியார், பாப்பாத்தியம்மன், கருப்புசாமி, சப்தகன்னிமார், நவக்கிரகங்கள் மற்றும் காட்டு வீரபத்திரர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 7-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், வாஸ்து சாந்தியும், 8-ந் தேதி தீர்த்தக்குடம் எடுத்து வருதல், முதல் கால யாகபூஜையும் நடைபெற்றது. 9-ந் தேதி இரண்டாம் கால யாகபூஜை, அஷ்டலட்சுமி பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை நான்காம் கால யாக பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்று காட்டு வீரபத்திரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சென்னிவீரபத்திரர் கோவில் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகமும், மூலஸ்தான சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகமும், அலங்கார, ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சாமி வீதி உலா நடைபெற்றது.


Next Story