செந்தில் பாலாஜிக்கு நாளை காலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை என தகவல்


செந்தில் பாலாஜிக்கு நாளை காலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை என தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2023 8:50 PM IST (Updated: 20 Jun 2023 9:26 PM IST)
t-max-icont-min-icon

செந்தில் பாலாஜிக்கு நாளை காலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 15-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியை பரிசோதித்து இரு மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையை சந்தேகிக்க முடியாது எனக் கூறி, அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது.

தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு கண்டறியப்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, செந்தில்பாலாஜிக்கு நாளை காலை 4 மணிக்கு அறுவை சிகிச்சை நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கின்றன.

அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதால் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story