வெவ்வேறு சம்பவம்: பாம்பு கடித்து பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் சாவு
வெவ்வேறு சம்பவங்களில் பாம்பு கடித்து பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் இறந்தனர்.
பேரையூர்,
வெவ்வேறு சம்பவங்களில் பாம்பு கடித்து பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் இறந்தனர்.
முதியவர் சாவு
பேரையூர் தாலுகா டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 70) சம்பவத்தன்று முதியவர் கந்தவேல் தனது கால்நடைகளுக்கு அங்குள்ள தோட்டத்தில் புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதில் மயங்கிய அவரை மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து சேடபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவர் பலி
திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி மொட்டமலை பகுதியில் வசித்து வந்தவர் வைரம். இவரது மனைவி உமாதேவி. இவர்களது மகன் விவேகானந்தன் (17) இவர் பசுமலையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் விவேகானந்தன் அவரது வீட்டில் படுத்து தூங்கிகொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்து விவேகானந்தனை கடித்துவிட்டது. அதில் அலறிய விவேகானந்தனை அவரது தாயார் உமாதேவி மதுரை அரசு ராஜாஜிமருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.. இதுகுறித்து திருநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.