தனித்தனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
கணக்குப்பதிவியல், உயிரியல் பாடங்களுக்கு தனித்தனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை
விழுப்புரம்
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் செல்வராஜ் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஜனகராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார். இதில் மாநில பொதுச்செயலாளர் தமிழ்மணியம், கணேசன், இளங்கோவன், சுப்பிரமணி, முகுந்தய்யா, கமலக்கண்ணன், அருணகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், உயிரியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களுக்கு தனிதனி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், நீண்ட நாள் நிலுவையில் உள்ள ஈட்டியவிடுப்பு சரண்டரை வழங்க வேண்டும், ஊக்க ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.