பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் சம்பவம்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர் சம்பவம் நடந்து வருகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த 2 வாரம் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களில், 2 பேர் தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு போலீஸ் நிலையத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் சாவதே மேல் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு சிலர் தீக்குளிக்க வருகின்றனர். சிலர் தீக்குளிக்க முயன்றால் தங்களது பொய்யான கோரிக்கைகளை நிறைவேற்றிவிடலாம் என்பதற்காக தீக்குளிப்பதுபோல் நாடகம் நடத்திவிட்டு செல்கின்றனர். எனவே பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களின் உண்மை தன்மையை கண்டறிந்து உரிய விசாரணை நடத்தி அரசு அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்தால் இந்த மாதிரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் நடைபெறாது என்பது பலரின் கருத்தாக உள்ளது.