மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்
சுதந்திர தின விழாவிற்காக சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி மாணவர்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருகே உள்ள பெரிய லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவருக்கு வெங்கடேஷ் (வயது 18), மதன்பாபு ( 13) ஆகிய 2 மகன்களும், சந்தியா (15) என்ற மகளும் உள்ளனர். இதில் சந்தியா, மதன்பாபு ஆகியோர் உத்தனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். பள்ளியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவிற்காக மதன்பாபு மற்றும் அதேபகுதியை சேர்ந்த லிக்கிதா (11) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் வெங்கடேஷ் அழைத்து சென்றார். சந்தியா பள்ளிக்கு நடந்்து சென்றார். பெரிய லட்சுமிபுரத்தில் இருந்து உத்தனப்பள்ளி சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீதும், சந்தியா மீதும் மோதியது. 3 மாணவர்கள் உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.