குண்டும் குழியுமான சாலை


குண்டும் குழியுமான சாலை
x

குண்டும் குழியுமான சாலை

திருப்பூர்

குடிமங்கலம்,

விருகல்பட்டி அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும் குழியுமான சாலை

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது விருகல்பட்டி ஊராட்சி. விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மரிக்கந்தையிலிருந்து இலுப்பநகரம், ஆலமரத்தூர் வழியாக பெதப்பம்பட்டி செல்லும் கிராம இணைப்பு சாலை உள்ளது. கிராம இணைப்புசாலையின்பல இடங்களில்குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதனால் வாகனஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ள நிலையில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பொருட்களையும் விவசாயத்திற்கு தேவையான இடுபொருள்களை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

விருகல்பட்டி பகுதியில்இருந்து இரவு நேரங்களில்அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது இப்பகுதியைச் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ள நிலையில் இச்சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர் எனவே விருகல்பட்டிஅருகே குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story