கோடை மழையால் எள் வயல்கள் பாதிப்பு


கோடை மழையால் எள் வயல்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 6 May 2023 12:45 AM IST (Updated: 6 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் கோடை மழையால் எள் வயல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் கோடை மழையால் எள் வயல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

எள் சாகுபடி

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரங்களில் கோடை மழை அதிக அளவு பெய்துள்ளது. இதனால் இந்த பகுதியில் சாகுபடி செய்து பூத்து காய்க்கும் தருணத்தில் இருந்த எள் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எள் வயலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

நடப்பு மே மாதத்தில் இதுவரை 178 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 4-ந் தேதி மட்டும் 74 மில்லி மீட்டர் மழை பெய்தது. மானாவாரி இறவைப் பயிரான எள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அதிக அளவு நீர் தேங்கி இருப்பதால், பயிர் வாட ஆரம்பித்து விட்டது.

உதவி இயக்குனர் ஆய்வு

மழை நின்று விட்டாலும் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்குள் அனைத்து எள் பயிரும் வதங்கி பட்டுப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் 2,800 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரானது மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் சூழலில் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் எள் வயல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார். சேகல், பின்னத்தூர், கொருக்கை, பாமணி, தேசிங்குராஜபுரம், கொக்கலாடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. ஆய்வின் போது வேளாண் துணை அலுவலர் ரவி, வேளாண்மை உதவி அலுவலர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story