குடிசை வீட்டுக்கு தீ வைப்பு


குடிசை வீட்டுக்கு தீ வைப்பு
x

கண்ணமங்கலம் அருகே குடிசை வீட்டுக்கு தீ வைத்தது குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே கீழ்பள்ளிப்பட்டு பகுதியில் நாடார் தோப்பில் தமிழ்செல்வி (வயது 70) என்பவர் தனது 7 வயது பேரனுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவில் குடிசை வீட்டு கதவைத் தாழிட்டு விட்டு மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு தப்பி விட்டனர்.

குடிசை வீடு எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தமிழ்செல்வியையும், அவரது பேரனையும் பாதுகாப்பாக மீட்டனர். தீயில் குடிசை வீட்டில் இருந்த அனைத்து பொருட்கள் சேதமானது.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் குடிசை வீட்டுக்கு தீ வைத்த நபர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிசை வீட்டை ஊராட்சி தலைவர் விஜயபாஸ்கர், முன்னாள் துணைத்தலைவர் முருகேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.


Next Story