தீ வைத்து கார் எரிப்பு
கருங்கல் அருகே தீ வைத்து கார் எரிப்பு
கன்னியாகுமரி
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி கல்லடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (36). எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு தனக்கு சொந்தமான சொகுசு காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றார். இரவில் யாரோ மர்ம நபர்கள் காரின் பின்பகுதியில் தீ வைத்து எரித்துள்ளனர். அந்த வழியாக சென்றவர்கள் காரில் தீ எரிவதை கண்டு ஜெகனிடம் தகவல் கூறினர். உடனே அவர் விரைந்து வந்து காரில் எரிந்த தீயை அணைத்தார். இதில் கார் சேதமடைந்தது. இதுகுறித்து ஜெகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story