வனப்பகுதியில் கூடாரம் அமைத்து 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்


வனப்பகுதியில் கூடாரம் அமைத்து 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 5:25 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வனப்பகுதியில் கூடாரம் அமைத்து 2-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

கூடலூர்,

கூடலூர் அருகே அமராவதி வனப்பகுதியில் ஆசாரிபள்ளம் என்ற இடம் உள்ளது. இங்கு கூடலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் வனப்பகுதியில் தங்கி ஏலக்காய், மிளகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர், அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். மீண்டும் விவசாயிகள் வனப்பகுதியில் விவசாயம் செய்ய முயன்றனர். ஆனால் வனத்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தி விவசாயிகளை வெளியேற்றினர்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 18 விவசாயிகள் திடீரென்று வனப்பகுதிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு கூடாரம் அமைத்து குடியேற முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் மேற்கு வனப்பகுதியைச் சேர்ந்த வனவர்கள் ரகுபதி, ஜெய்சிங் மற்றும் லோயர்கேம்ப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக வனப்பகுதியில் தங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே வனப்பகுதியில் இருந்து விவசாயிகளை வெளியேற்றுவது குறித்து நேற்று காலை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.


Next Story