தனியார் மதுபான பார் அமைப்பதை தடுக்க வேண்டும்


தனியார் மதுபான பார் அமைப்பதை தடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொன்மனை பேரூராட்சியில் தனியார் மதுபான பார் அமைப்பதை தடுக்க வேண்டும்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

பொன்மனை பேரூராட்சி துணைத்தலைவர் அருள்மொழி தலைமையில் கவுன்சிலர்கள் கிருஷ்ணகுமார், ஜெகன், ராதாகிருஷ்ணன் மற்றும் சிலர் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்திடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொன்மனை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு கட்டிடத்தில் தனியார் மதுபான பார் அமைக்க சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையாளர் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதனை கண்டித்து பேரூராட்சி கூட்டத்தில் மதுபான பார் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடைவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, குடியிருப்புகள் அதிக உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபான பார் அமைப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story