குமரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,307 வழக்குகளுக்கு தீர்வு

குமரி மாவட்டத்தில் நடந்த  மக்கள் நீதிமன்றத்தில் 1,307 வழக்குகளுக்கு தீர்வு
x

குமரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் 1,307 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் ரூ.9.19 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் 1,307 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் ரூ.9.19 கோடி இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி

நாடு முழுவதும் லோக் அதாலத் என்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாகர்கோவிலில் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான அருள்முருகன் தொடங்கி வைத்தார்.

தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி நம்பி ராஜன், சார்பு நீதிபதி சொர்ணகுமார், மாஜிஸ்திரேட்டுகள் தாயுமானவர், கீர்த்தனா, வக்கீல்கள் மற்றும் வழக்கு தொடர்ந்தவர்கள், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

1307 வழக்குகளுக்கு தீர்வு

இதுபோல், பூதப்பாண்டி, பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை ஆகிய கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள சொத்து சம்பந்தமான வழக்குகள், செக் மோசடி, வாகன விபத்து சம்பந்தமான வழக்குகள், குடும்ப நல வழக்குகள் என மொத்தம் 1,913 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 1,307 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் இழப்பீட்டுத் தொகையாக ரூ.9 கோடியே 19 லட்சத்து 35 ஆயிரத்து 28 வழங்க ஆவணம் செய்யப்பட்டது.

-

Next Story