மக்கள் நீதிமன்றத்தில் 167 வழக்குகளுக்கு தீர்வு
சிவகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 167 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தென்காசி
சிவகிரி:
சிவகிரி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வைத்து மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதி கே.எல். பிரியங்கா தலைமை தாங்கினார். 341 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 167 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதில் ரூ.2 லட்சம் அபராத தொகையாக வசூலிக்கப்பட்டது.
இதில் தலைமை எழுத்தர் கலாமணி, அரசு வழக்கறிஞர் பேட்ரிக் பாபு, செந்தில்குமார், சிவகிரி மண்டல துணைத் தாசில்தார் மைதீன் பாட்சா, கடையநல்லூர் துணைத் தாசில்தார் சங்கரலிங்கம், புளியங்குடி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story