தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 189 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 189 வழக்குகளுக்கு தீர்வு
x

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 189 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சாவூர்

திருவையாறு நீதிமன்ற வளாகத்தில் திருவையாறு வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர்- மாவட்ட உரிமையியல் நீதிபதி சந்திரசேகர் தலைமையிலும், நீதித்துறை நடுவர் ஹரிராம் முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், குற்ற வழக்குகள் உள்ளிட்ட 227 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் 189 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.7,67,200 வசூல் செய்யப்பட்டது. இதில் வக்கீ்ல் அம்சவள்ளி, அரசு வக்கீல் ரவிச்சந்திரன் மற்றும் வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு வட்ட சட்டப்பணிகள் குழுவின் இளநிலை நிர்வாக உதவியாளர் சுதர்சனன் மற்றும் தன்னார்வலர் எழிலரசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story