மக்கள் நீதிமன்றத்தில் 38 வழக்குகளுக்கு தீர்வு
ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 38 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிபதி மருத சண்முகம், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி நவீன்துரைபாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.
மக்கள் நீதிமன்றத்தில் 91 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அதில், 38 வழக்குகளுக்கு, 1 கோடியே 88 லட்சத்து 67 ஆயிரத்து 828 ரூபாய் தீர்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில் வக்கீல்கள் அண்ணாதுரை, மனோகரன், அரி, பார் அசோசியேஷன் தலைவர் நித்தியானந்தம், நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்கள், வழக்காடிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story