மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 97 வழக்குகளுக்கு தீர்வு


மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 97 வழக்குகளுக்கு தீர்வு
x

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 97 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கடலூர்

டெல்லி தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் சென்னை தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி கடலூர் கோர்ட்டில் நில எடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதற்கு கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜவகர் தலைமை தாங்கினார்.

மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் 2-வது சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான பிராபாகர், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதி சுதா, முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் வனஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் பொருளாளர் வக்கீல் பாபு, லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் வனராசு, செயலாளர் சிவசிதம்பரம் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

97 வழக்குகளுக்கு தீர்வு

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நில எடுப்பு வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் சிவில் வழக்குகள் விசாரனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றம் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி மற்றும் திட்டக்குடி நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடை பெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் 6 அமர்வுகள் மூலம் சுமார் 163 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 97 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ.2 கோடியே 12 லட்சத்து 56 ஆயிரத்து 271 தொகை வழங்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.


Next Story