சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல்


சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல்
x
திருப்பூர்

சேவூர்:

சேவூரின் மையப்பகுதியில் செல்லும் கோபி சாலையில் வாரச்சந்தை அமைந்துள்ளது. இந்த வாரச்சந்தை திங்கிட்கிழமை தோறும் கூடுகிறது. சந்தையின் உட்புறம் 800 கடைகளுக்கு மேல் அமைக்க இடம் உள்ள நிலையில் சந்தையின் உள்பகுதியில் குறைவான கடைகளே செயல்படுகிறது. ஆனால் வெளிப்புறப்பகுதியில் உள்ள கோபி சாலையில் 200 கடைகளுக்கு மேல் அமைத்துள்ளனர்.

பொதுமக்கள் அதிகமாக மாலை நேரங்களில் பொருட்களை வாங்க வருகின்றனர். அப்போது இருபுறமும் கூட்ட நெரிசலும், கோபி மற்றும் கோவை செல்லும் பஸ்களும், கார்களும், மோட்டார் சைக்கிள்களும் அதிகமாக வருவதால் கூட்ட நெரிசலால் மோதி விபத்து ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், விபத்து எற்படுவதை தடுக்க சந்தையில் உள்புறத்தில் உள்ள காலி இடங்களில், சாலையோரம் செயல்படும் கடைகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story