தெருக்களில் வழிந்தோடு கழிவுநீர்


தெருக்களில் வழிந்தோடு கழிவுநீர்
x

தெருக்களில் வழிந்தோடு கழிவுநீர்

தஞ்சாவூர்

தஞ்சை மேலவெளி பஞ்சாயத்தில் சூர்யா நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைதொட்டி மூடி உடைந்துள்ளது. மேலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் கொசு தொல்லையும் அதிக அளவில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும்.

-சூர்யாநகர் மக்கள், மேலவெளி பஞ்சாயத்து, தஞ்சாவூர்.


Next Story