சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்


சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
x

கும்பகோணம் உழவர் சந்தை அருகே உள்ள சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் உழவர் சந்தை அருகே உள்ள சாலையில் பெருக்கெடுத்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை கழிவுநீர்

கும்பகோணம் உழவர் சந்தை அருகே ஏ.ஆர்.ஆர்.காலனி உள்ளது. இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உழவர் சந்தை அருகே பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி செல்கிறது.

இது சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை கடந்த 1 வாரத்துக்கு மேலாக நீடிப்பதாக கூறப்படுகிறது.

தொற்று நோய் பரவும் அபாயம்

அதுமட்டுமின்றி வெளியேறும் கழிவுநீர் ஏர்.ஆர்.ஆர்.காலனியில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது.இவற்றால் அந்த பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதே போல கும்பகோணம் ஸ்ரீ ராம் நகர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்தும் கழிவுநீர் வெளியேறி செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.


Next Story