தெருக்களுக்குள் புகுந்த கழிவுநீர்
பராமரிப்பு இல்லாத காரணத்தால் கழிவுநீர் தெருக்களில் புகுந்தது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையம்பட்டி ஊராட்சி நீராவி தெருவில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாத நிலை உள்ளது. கால்வாயில் அடைப்பு இருப்பதால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் தெருக்களில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story