சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
சாத்தூர்,
சாத்தூர் மேலக்காந்தி நகர் வீரமெய்யம்மாள் 1, 2, 3, 4 ஆகிய நான்கு தெருக்களில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இப்பகுதியில் கழிவுநீர் வாருகால்கள் தூர்வாராததால் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் செல்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. இப்பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் முடிவடைந்த நிலையில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் இப்பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட புதிய குடிநீர் குழாய் இணைப்பு இந்த வாருகாலின் மேலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் புதிய சாலை அமைப்பதற்கு முன் 4 தெருக்களிலும் உடனடியாக கழிவுநீர் வாருகால்கள் புதிதாக அமைத்து சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.