நல்லாற்றில் கழிவுநீர் தேக்கம்; நோய்கள் பரவும் அபாயம்


நல்லாற்றில் கழிவுநீர் தேக்கம்;   நோய்கள் பரவும் அபாயம்
x

நல்லாற்றில் கழிவுநீர் தேக்கம்; நோய்கள் பரவும் அபாயம்

திருப்பூர்

அவினாசி

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்லும் வழியில் இருபுறமும் உள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் நல்லாறு உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவது நடைமுறை. அதேசமயத்தில் அவினாசி பேரூராட்சி பகுதியில் சீனிவாசபுரம், கடைவீதி உள்ளிட்ட குடியிருப்புகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த நல்லாற்றில் கலக்கிறது. மேலும் குப்பை, கழிவுப்பொருட்கள் இங்கு கொட்டப்படுகிறது. நாளடைவில் குப்பைகள் தேங்கி தேவையற்ற மரம், செடி, கொடிகள் மண்டிவிடுவதால் கழிவுநீர் குட்டைபோல் அங்கு நிற்கிறது. இதில் அதிகமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நல்லாற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே நல்லாற்றை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும். மேலும் குப்பைகள் கழிவுப்பொருட்களை அங்கு கொட்டாமல் இருக்க பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Next Story