கான்கிரீட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை
நல்லம்பள்ளி அருகே கான்கிரீட் சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்க பூமி பூஜை நடந்தது.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டை ஊராட்சி கீழ்காளியம்மன் கோவில் அருகே ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், தடங்கம் ஊராட்சி பாலாஜி நகர் சந்திப்பு சாலையில் இருந்து மோட்டுகொட்டாய் வரை ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் முருகன், பா.ம.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் பா.ம.க. நிர்வாகிகள் பெரியசாமி, சண்முகம், மனோகரன், அன்புகார்த்திக், குமார், வெங்கடேசன், ஆனந்தன், குணசீலன், சுப்பிரமணி, சத்தியமூர்த்தி, நவீன்குமார், அன்பரசன், மாதையன், பாலகிருஷ்ணன், சின்னசாமி, ஸ்ரீராம், சுப்பிரமணி, வார்டு உறுப்பினர் சக்தி, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story