ஆபத்தான நிலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்


ஆபத்தான நிலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாய்
x

ஆபத்தான நிலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணா ஜெயின் பள்ளி அருகில் பாரதி ரோடும், மருத்துவர் தெருவும் சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து கழிவுநீர் முழுவதும் சாலையில் ஆறாக ஓடி தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் கழிவுநீர் கால்வாயை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story