குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் அதிகரிப்பு


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் அதிகரிப்பு
x

போக்சோ சட்ட விதிகள் கடுமையாக இருந்தபோதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

மதுரை

போக்சோ சட்ட விதிகள் கடுமையாக இருந்தபோதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

2 வயது குழந்தைக்கு தொந்தரவு

தேனி மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரம் அடைந்து, கடந்த 2015-ம் ஆண்டில் தனது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பேரில் தேனி மாவட்ட அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தேனி மாவட்ட கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரியும் அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவரது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். போக்சோ சட்டம், நமது குழந்தைகளை காப்பாற்றவும் அவர்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உறுதி செய்யவும் இயற்றப்பட்டது. ஆனால், தந்தை தன் சொந்த குழந்தைக்கு எதிராக இப்படி ஒரு குற்றத்தை செய்திருக்கிறார்.

பாலியல் குற்றம் அதிகரிப்பு

போக்சோ சட்டத்தின் விதிகள் மற்றும் அதன் மீதான தண்டனைகள் மிகவும் கடுமையானவை. இந்த விதிகள் இருந்தபோதிலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் ஆபத்தான முறையில் அதிகரித்து வருகின்றன என்பது உண்மைதான். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. குழந்தையை அப்பா வழி பாட்டி பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர். குழந்தையை வளர்க்க பணம் அனுப்புவதால் மட்டும் மனுதாரர் மீதான தண்டனையை ரத்து செய்ய முடியாது. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story