பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும்- ஜனநாயக மாதர் சங்கம்


பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும்- ஜனநாயக மாதர் சங்கம்
x

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

மயிலாடுதுறையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட 16-வது மாநாடு நடந்தது. இதற்கு முன்னாள் ஒன்றிய தலைவர் கஸ்தூரி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் ராணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் வெண்ணிலா வேலை அறிக்கையை படித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி, மாநில செயலாளர் கீதா, பேராசிரியர் சாந்தகுமாரி, பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில முன்னாள் செயலாளர் லீலாவதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பாலியல் வன்முறை

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். மகளிர் குழு என்ற பெயரில் பெண்களை பாதிக்கும் நுண்நிதி கடன் நிறுவனங்களை தடுத்து நிறுத்தி அரசே மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்க வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உடனே குறைக்க வேண்டும். ஏழை, நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மத்தியக்குழு உறுப்பினர் ராதிகா நிறைவுரை ஆற்றினார்.


Next Story