சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்


பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி நேற்று மதியம் அங்குள்ள மலட்டாறு பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த திருவாமூர் காலனியை சேர்ந்த சரவணன் மகன் மாணிக்கவேல்(வயது 25) என்பவர் தனியாக இருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மாணிக்கவேலை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


Next Story