பண்ருட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


பண்ருட்டி அருகே  10-ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x

பண்ருட்டி அருகே 10-ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்


பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயதான மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், புதுப்பேட்டை நெருஞ்சிப்பேட்டை தெருவை சேர்ந்த லோகநாதன் மகன் ராஜா(வயது 22) என்பவர் மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜா மீது வழக்குப்பதிந்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story