அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை


அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 187 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் மஞ்சுநாத் (வயது 43) என்பவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகள், அவர்களது பெற்றோர் குழந்தைகள் நலக்குழு மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் புகார் செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் கோவிந்தன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.

பணி இடைநீக்கம்

இதையடுத்து அந்த குழுவினர், பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், மாணவிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர் மஞ்சுநாத் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பான விரிவான அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர் மஞ்சுநாத்ைத பணி இடைநீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story