16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு
கடத்தூா்
கோபி அருகே உள்ள கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த பெற்றோர் கோபி போலீசில் புகார் அளித்தனர். அதில் தங்களுடைய 16 வயதுடைய மகளை கோபி கணபதிபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடத்தி சென்றுவிட்டதாகவும், எனவே மகளை மீட்டு தரவேண்டும் என்றும் கூறியிருந்தார்கள்.
அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடர்ந்தபோது கணபதிபாளையத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன்தான் திருமண ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் ரீதியதாக துன்புறுத்தியது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுமியை மீட்டார்கள்.
பின்னர் கைது செய்யப்பட்ட சிறுவன் ஈரோட்டில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதன்பிறகு கோர்ட்டு உத்தரவுப்படி சிறுவன் கோவையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.
Related Tags :
Next Story