சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு; டிரைவர் கைது


சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு; டிரைவர் கைது
x

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் பகவதியப்பன் (வயது 52). அரசு பஸ் டிரைவரான இவர் சம்பவத்தன்று 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுவனின் பெற்றோர், நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பகவதியப்பனை கைது செய்தனர்.


Next Story