சிறுமிக்கு பாலியல் தொல்லை; கொத்தனார் கைது


சிறுமிக்கு பாலியல் தொல்லை; கொத்தனார் கைது
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை; கொத்தனார் கைது

கன்னியாகுமரி

குளச்சல்:

கொல்லங்கோடு அருகே உள்ள கிரத்தூரை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 45), கொத்தனார். கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு வாய்பேச முடியாத, காது கேட்காத 15 வயது மகள் உள்ளார். சம்பவத்தன்று சிறுமியின் தாயும், தந்தையும் வேலைக்கு சென்று விட்டனர். இதனால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த லாரன்ஸ் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மாலையில் வேலை முடிந்து வந்த தாயாரிடம் நடந்த சம்பவம் பற்றி சிறுமி சைகை மூலம் கூறி கதறி அழுதார். இதைகேட்டு சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், லாரன்ஸ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story