மாணவிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு ஆயுள் தண்டனை


மாணவிக்கு பாலியல் தொல்லை;   வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 3 Sep 2022 5:30 PM GMT (Updated: 2022-09-03T23:08:05+05:30)

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 32).பெயிண்டர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு 16 வயதான 11-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பான புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தீர்ப்பு அளித்தார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்திரமோகனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story