மாணவிக்கு பாலியல் தொல்லை;தொழிலாளி கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை;தொழிலாளி கைது
x

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சேலம்

கொண்டலாம்பட்டி,

பனமரத்துப்பட்டி அருகே ஆத்துபுதூரை சேர்ந்தவர் சம்பத் (வயது 35), கல் உடைக்கும் தொழிலாளி. இவர், 7-ம் வகுப்பு படிக்கும் மாணவியை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சம்பத் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து மல்லூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்ய முயன்றனர். அவர் தப்பி ஓடிய போது தவறி பள்ளத்தில் விழுந்தார்.

காயம் அடைந்த அவரை போலீசார் கைது செய்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story