பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் சிறையில் அடைப்பு


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் சிறையில் அடைப்பு
x

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்

பாலியல் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வகுமார்(வயது 33). இவர் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என்று குற்றச்சாட்டு தெரிவித்து பெற்றோர்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தினர் பள்ளி மாணவிகளிடம் விசாரித்ததில் ஆசிரியர் செல்வகுமார் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.

சிறையில் அடைப்பு

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் செல்வகுமாரை வலைவீசி தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ஆசிரியர் செல்வகுமாரை போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story