சக்தி முத்தாலம்மன் கோவில் தேரோட்டம்
தெள்ளாரில் சக்தி முத்தாலம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
வந்தவாசி,
வந்தவாசியை அடுத்த தெள்ளார் கிராமத்தில் உள்ள சக்தி முத்தாலம்மன் கோவிலில் சித்திரை மாத தேரோட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சக்தி முத்தாலம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பின்னர் சக்தி முத்தாலம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
தெள்ளார் பகுதியில் உள்ள முக்கிய வீதி வழியாக தேர் சென்றது. தேர் செல்லும் வழியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story