அய்யன்கொல்லி அருகே சக்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா


அய்யன்கொல்லி அருகே சக்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 8 May 2023 6:00 AM IST (Updated: 8 May 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே சக்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழா

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திசால் பாதிரிமூலா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கணபதி பூைஜ மற்றும் சாமிக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடந்தது. காலை 10 மணிக்கு கோட்டப்பாடியிலிருந்து பால்குடம் ஊர்வலம் நடைப்பெற்றது. பகல் 12 மணிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. 4-ந்்தேதி வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஸ்ரீசக்தி விநாயகரின் தேர்ஊர்வலம் புறப்பட்டு பாதிரிமூலா, அத்திசால், கள்ளிசால் செம்பகொல்லி வரைசென்று கோவிலை வந்தடைந்தது. 5 -ந்தேதி காலை 5 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. முருகனுக்கு பாலாபிஷேகமும் நடைபெற்றது மாலை 5 மணிக்கு 2-வது நாளாக தேர்ஊர்வலம் மூலைகடை வழியாக அய்யன்கொல்லி வரை சென்று கோவிலை வந்தடைந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு அலங்காரபூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பரிகாரதெய்வங்களுக்கும் மஹாலட்சுமிக்கும், பாலமுருகனுக்கும் அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு தீபாராதனை மற்றும்சிறப்பு பூஜைகள் விழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story