கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சனி பிரதோஷ வழிபாடு
சனி பிரதோஷ வழிபாடு சிவாலயங்களில் வெகு சிறப்பு வாய்ந்ததாகும். ஆனி மாதத்தில் வரும் பிரதோஷத்தில் நந்தி பகவானை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களில் நம்பிக்கை.
அதன்படி நேற்று ஆனி மாதத்தில் சனி பிரதோஷம் வந்ததால் தூத்துக்குடி மாவட்ட கோவில்களில் சிவாலயங்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
சங்கரராமேசுவரர் கோவில்
அதுபோல் தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதில் நந்தி பகவான் மற்றும் சுவாமிக்கு பால், தயிர், விபூதி, சந்தனம், இளநீர் தேன், பழங்கள் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் நடந்த சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சியில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கிரிவலம் பாதையில் வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று மாலையில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூவன நாத சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் சுவாமிநாத பட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் ஊழியர்கள் பிரசாதம் வழங்கினார்கள்.
நங்கைமொழி
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது விழாவில் சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அலங்கார தீபாராதனைக்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.