சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை


சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை
x
தினத்தந்தி 13 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-14T00:30:53+05:30)

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை

திண்டுக்கல்


நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டி பூஜை நேற்று நடந்தது. இதில் முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனை ஆகியவை நடந்தது. மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


----Next Story