போதைப்பொருட்களை ஒழிக்க புனித போர் மேற்கொண்டுள்ேளாம்
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க புனிதப்ேபார் மேற்ெகாண்டுள்ளோம் என ேபாலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க புனிதப்ேபார் மேற்ெகாண்டுள்ளோம் என ேபாலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
டி.ஜி.பி. திடீர் ஆய்வு
கன்னியாகுமரியில் இருந்து மதுரை செல்லும் வழியில் விருதுநகரில் உள்ள மேற்கு போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். போலீஸ்நிலையங்களில் வரவேற்பாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். போலீசில் புகார் கொடுப்பதற்காக வருபவர்களிடம் அதனை பெற்று பதிவு செய்வதோடு, 2 நாட்கள் கழித்து அவர்களை தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா என கேட்டு அவர்களது பதில் அடிப்படையில் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
ஆயுள் தண்டனை
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. பழைய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றங்களில் ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் போலீசார் பிடியிலிருந்து தப்ப முயற்சிக்கும்போது, குறைந்தபட்சம் அவர்களது கால் பகுதியில் சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் இது அவர்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. தமிழகத்தில் குற்றவியல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சில குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று விடுகின்றனர். அவர்களையும் பிடித்து தமிழகத்திற்கு கொண்டு வந்து அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
புனிதப்போர்
கஞ்சா விற்பனையை தடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில குறிப்பிட்ட போலீஸ்நிலைய விசாரணை எல்லை பகுதிகளில் கஞ்சா இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி மாவட்ட அளவில் கஞ்சா இல்லை என்று அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா கிடைக்காத நிலையில் போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து போதை பொருட்களின் பயன்பாட்டை தடுக்க போலீசார் புனிதப்போரை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) ஒரே நாளில் 9 பெண்கள் மாயமானது குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குறைகள் கேட்டார்
இதனை தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டு அறிந்தார். சிலர் தங்களுக்கு ஊதிய முரண்பாடு குறித்து முறையிட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீசாரின் குழந்தைகள் டி.ஜி.பி.யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தவுடன் அவரிடம் ஆட்டோகிராப் பெற்றனர். அவர் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வாசகங்கள் எழுதி கையெழுத்திட்டதுடன் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், துணை சூபபிரண்டு அர்ச்சனா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். முன்னதாக போலீஸ் நிலையம் வந்த அவரை நிலைய அதிகாரிகள் இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், தென்றல் மற்றும் போலீசார் வரவேற்றனர்.