சேகர் மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா
ராணிப்பேட்டையில் சேகர் மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை எல்.எப். ரோடு பைபாஸ் சாலையில் சேகர் மோட்டார்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவன தென் மண்டல மேலாளர் வெங்கடேஷ் துரமல்லா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சேகர் மோட்டார்ஸ் புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சேகர் மோட்டார்ஸ் புதிய ஷோரூம் வளாகத்தில் உள்ள வீல் அலைன்மென்ட், ஸ்பேர் பார்ட்ஸ் அலுவலகம், சர்வீஸ் அறை, ரோடு சேப்டி அறை, மேற்பார்வையாளர்கள் அறை, டாடா ஏசி லிப்டிங் பிரிவு, தொழில் அலுவலகம், வாடிக்கையாளர்கள் அறை, கான்பரன்ஸ் ஹால் போன்றவைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகள், டி.எம்.எப். அதிகாரிகள் பானு பிரகாஷ். டேனியேல், ஹரிஹரன் நாயர், டேவிட், சிவநாகலிங்கம், மணிவண்ணன், லாரன்ஸ், ரமேஷ்பாபு, பிரசன்னா, ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மேலும், விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் சேகர் மோட்டார்ஸ் உரிமையாளர் கே.சந்திரசேகர் மலர் மாலைகள், பூங்கொத்து மற்றும் சால்வைகள் அணிவித்து வரவேற்றார்.
விழாவில் கே.கே.ரஞ்சித்குமார், டி.ஆர்.மோகன், பொறியாளர்கள் டி.எம்.குணா, பி.ராஜசேகர், பெல் எஸ்.பி.ஐ. வங்கி கிளை மேலாளர் கே.கிருஷ்ணகுமார் மற்றும் தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள், பல்வேறு வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முடிவில் சேகர் மோட்டார்ஸ் உரிமையாளர்கள் விமலா, லதா, மோகன்பாபு, புவன்பாபு ஆகியோர் நன்றி கூறினர்.