நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அச்சுறுத்துவதாக கூறிவிவசாயி கால்நடைகளுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்


நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அச்சுறுத்துவதாக கூறிவிவசாயி கால்நடைகளுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
x

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அச்சுறுத்துவதாக கூறி விவசாயி கால்நடைகளுடன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

மத்தூர்

நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அச்சுறுத்துவதாக கூறி விவசாயி கால்நடைகளுடன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியதம்பி (வயது42) அதேபகுதியை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயிகள். இவர்களுக்குள் நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. சம்பவத்தன்று நாகராஜ் பிரச்சினைக்குரிய நிலத்தில் உள்ள பைப் லைன்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெரியதம்பி போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையில் நேற்று நாகராஜ் குடும்பத்தினர் பெரியதம்பி நிலத்திற்குள் புகுந்து டிராக்டர் கொண்டு நிலத்தை உழுதுள்ளனர். இதை பெரியதம்பியின் மனைவி வசந்தா தட்டி கேட்டுள்ளார். அப்போது, அவரை நாகராஜ் குடும்பத்தினர் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த வசந்தா போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

இந்தநிலையில் பெரியதம்பி தனது தந்தை காளியப்பன், மகன் கோபிசங்கர், மகள் நிஷா மற்றும் மாடு, கோழிகள், நாய் ஆகியவற்றுடன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நிலப்பிரச்சினை தொடர்பாக மனு அளித்தும் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் நாகராஜ் தரப்பினர் தொடர்ந்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அச்சுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பிற்காக தஞ்சம் அடைந்துள்ளேன் என கூறினார். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றார். விவசாயி மாடு, கோழி மற்றும் நாயுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story