கொளத்துப்பாளையம் கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில் தொழிற்பேட்டை


கொளத்துப்பாளையம் கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில் தொழிற்பேட்டை
x

கொளத்துப்பாளையம் கூட்டுறவு நூற்பாலை வளாகத்தில் தொழிற்பேட்டை

திருப்பூர்

தாராபுரம்

அ.தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்ட கொளத்துப்பாளையம் கூட்டுறவு நூற்பாலையில் தொழிற்பேட்டை அமைப்பது குறித்து அரசு முயற்சித்து வருவதாக அமைச்சர் கயல்விழி கூறினார்.

பொங்கல் விழா

தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் கே.கே. துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கல் விழாவை தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கி பேசியதாவது:-

கொளத்துபாளையம் பேரூராட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாராபுரம் அரசு மருத்துவமனையை ரூ.24 கோடியில் தரம் உயர்த்த அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்ட கொளத்துப்பாளையம் கூட்டுறவு நூற்பாலை பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது குறித்த முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அது குறித்து பரிசீலனை செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். விரைவில் நல்ல செய்தி வரும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


---

பொங்கல் விழாவில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்ட போது எடுத்த படம்.


Next Story