சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x

சிங்கம்புணரி அருகே சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே சிவன் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவில் உண்டியல் உடைப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி கிராமத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மஷம்வர்ஷினி உடனுறை தான்தோறீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் வடுகபைரவர் சன்னதியும் இருக்கிறது.

இந்த கோவிலில் நேற்று காலை வழக்கம் போல ரவி குருக்கள் கோவிலை திறக்க சென்றார். கோவில் கதவு பூட்டு, உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம், காணிக்கைகள் கோவிலுக்குள் சிதறி கிடந்தன. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இது குறித்து தேவஸ்தான கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தேவஸ்தான கண்காணிப்பாளர் மற்றும் சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கோவிலில் கதவு பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை நேரில் பார்ைவயிட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உண்டியலில் கைரேகை எதுவும் பதிவாகி இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது.

கண்காணிப்பு கேமராவில் சிக்கிய ஆசாமி

இதற்கிடையே கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கோவிலுக்குள் மர்ம ஆசாமி நுழைந்தது பதிவாகி இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பதை போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உண்டியலை உடைத்து பல லட்சம் ரூபாய் உள்ள காணிக்கை பணத்தை மர்ம ஆசாமி கொள்ளையடித்து சென்று இருக்க கூடும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். கடந்த 8-4-2021 அன்று உண்டியலை திறந்து எண்ணிய போது 31 ஆயிரத்து 718 ரூபாய் இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து ஏராளமாேனார் கோவிலுக்கு வர தொடங்கி இருப்பதால் உண்டியலில் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக இருக்கலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story