சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா


சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நடிகர் சிவாஜி மன்றம், நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் சார்பில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி செண்பகப்பேரி கிராமத்தில் 94 பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. சிவாஜி மன்ற தலைவர் கருப்பசாமி தலைமையில் விவேகானந்தா சேவா சங்கத் தலைவர் பி.கே.நாகராஜன், சிவாஜி மன்ற தலைவர் சுப்பராயலு, நிர்வாகிகள் வக்கீல் முத்துராமலிங்கம், அய்யாதுரை, வேலுச்சாமி, கருப்பசாமி, கொம்பையா ஆகியோர் பனை விதைகள், மரக்கன்றுகளை நட்டினார்கள். அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.


Next Story