கடையின் பூட்டை உடைத்து பணம்- மோட்டார் சைக்கிள் திருட்டு


கடையின் பூட்டை உடைத்து பணம்- மோட்டார் சைக்கிள் திருட்டு
x

பாளையங்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து பணம்- மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே சேவியர் காலனி பின்புறம் ரோஸ் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜெனி சாமுவேல் (வயது 22). இவர் அதே பகுதியில் எக்ஸ்ரே எடுக்க பயன்படும் பிளிம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஜெனி சாமுவேல் கடையை பூட்டிவிட்டு தனது நண்பருடன் படத்துக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த ரூ.21 ஆயிரம் மற்றும் கடையின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story